திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து..

share on:
Classic

திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். 

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பிரசார கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியில் ஒரு தேர்தல் கூட ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்றும் கூறினார். மாவட்ட நிர்வாகம் இன்றைக்கு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்த அவர், ஆனால் திமுக ஆட்சியில் காவல்துறை, மாவட்ட நிர்வாகமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரவுடிஸம் தான் என்றும், கருவாடு மீனாக மாறலாம், காகிதப்பூ கூட மணக்கலாம், ஆனால் திமுக ஒருகாலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ramya