திமுக கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியீடு..!

share on:
Classic

தி.மு.க. கூட்டணியில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற பட்டியலை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். 

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதனைத் தொடர்ந்து, தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதனையடுத்து, தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற பட்டியலை, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev