பொள்ளாச்சி ஜெயராமன் ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ்..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பியதற்காக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டுமென திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஷாஜகான் அனுப்பியுள்ள நோட்டீஸில், தனது கட்சியினர் மற்றும் குடும்பத்தினரின் குற்றத்தை மறைப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மீது பொள்ளாச்சி ஜெயராமன் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியதாக குறிப்பிட்டுள்ளார். 

இதற்காக ஸ்டாலினிடம் பொள்ளாச்சி ஜெயராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என கேட்டுகொண்ட அவர், அவதூறான செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார். இதனை செய்யாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev