கஜா பாதிப்பு : மத்திய குழு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

share on:
Classic

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவின் ஆய்வு முறையாக நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

கஜா புயலுக்காக தமிழக அரசு கோரிய நிவாரணம் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், அதிக நிதியை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் மத்திய அரசு போதுமான நிதியை தரவில்லை என்றாலும், இப்போதாவது மாநில அரசு கோரிய நிதியை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஓய்வு கிடைக்கும் போது புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்வார் என்ற நினைப்பதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind