பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை - மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்

share on:
Classic

நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன்னை முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளதாக விமர்சித்துள்ள அவர், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் என்றும் மதவாதக்குரல்கள் எழுந்ததும், பாஜக கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி வாஜ்பாய் அல்ல; மோடி உருவாக்கிய கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்ற ஆரோக்கியமான கூட்டணி அல்ல என சாடியுள்ள அவர் தமிழக உரிமைகள் மோடி ஆட்சி காலத்தில் தான் பறிக்கப்பட்டன என்பதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் எனக் கூறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind