வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா.. ரூ.1 கோடி நிவாரண நிதி கொடுத்த திமுக...

Classic

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதற்கிடையில், வெள்ள நிவாரணத்துக்காக நிதியளிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ1 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100

Giri