தேவையில்லாமல் தி.மு.க-வை விமர்சிக்கக் கூடாது - கே.எஸ்.அழகிரி

share on:
Classic

தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கண்டிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக முன்னிலைப்படுத்திக் கொண்டதாலும், பா.ஜ.க., அ.தி.மு.க. மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நோக்கத்தில் தான், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமலுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கமலுக்கு அழைப்பு விடுத்தபோது, தி.மு.க.-வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது கவனத்திற்கு வரவில்லை என கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். திமுகவை கமல் விமர்சனம் செய்திருப்பது பா.ஜ.க.-வுக்கு உதவும் என குறிப்பிட்டுள்ளார். அவசியமில்லாமல், தேவையில்லாமல் கமல் தி.மு.க.-வை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாக அறிக்கையில் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth