“ஜெய் ஸ்ரீ ராம்” கூற சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது : மத்திய அமைச்சர் கருத்து

share on:
Classic

ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அண்மைக் காலங்களாக ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் போன்ற முழக்கங்களை கூற சொல்லி கட்டாயப்படுத்துவதும், மறுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் என பல்வேறு சம்பவங்கள் வட மாநிலங்களில் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் குறிப்பாக சிறுபான்மையினர், அதிலும் முஸ்லீம்களே அதிகமாக தாக்கப்படுகின்றனர். கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லீம் இளைஞர் கும்பல் தாக்குதல் காரணமாக உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரின் மரணத்திற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஜெய் ஸ்ரீ ராம் என்ற கூற சொல்லி யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ கும்பல் தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் “ ராஜஸ்தானில் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 6 மாதத்திற்கு வெளியில் வர முடியாது. உத்திரப்பிரதேசத்தில் குற்றவாளிகள் 4 மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டார்கள். என்ன சம்பவமாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுகிறது. நீங்கள் யாரையும் எதையும் செய்ய கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் வந்தே மாதரம் என்று சொல்லவும் மறுக்க முடியாது. இரண்டு பக்கமும் சமநிலையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya