விசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா? இதலாம் பாத்து வெச்சுக்கோங்க...

share on:
Classic

இளசுகளின் தீராத கனவாக உள்ளது வெளிநாட்டு சுற்றுலா. ஏனென்றால்,  இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டுக்கு போகவேண்டும் என்றாலும் விசா அத்தியாவசியமாகி போனதாலே இளைஞர்களின் கனவுகள் கனவாகவே உள்ளது.

ஆனாலும் சில நாடுகளில் ‘விசா கீசா’ என எதும் கேளாமல் வெறும் முக்கிய ஆவணங்களையே கேட்கிறது. அப்படி எந்த நாடுகள் உள்ளது என பார்க்கலாம்.

1) ஃபிஜி:

மெலனீசியா பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு தான் ஃபிஜி. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் ஃபிஜி தீவு உருவானது. இந்த தீவுக்கு சுற்றுலா செல்ல அடிப்படை ஆவணங்களே போதுமானது. முழுக்க முழுக்க எழில் கொஞ்சும் இயற்கையின் அழகை ரசிக்க ஏதுவான பகுதி. 

மேலதிக விவரங்களுக்கு: https://www.fiji.travel/

2) பூட்டான்:

இந்தியாவின் எல்லைக்கு அருகே உள்ள நாடு பூட்டான். இது திபெத்துக்கு வடக்கே அமைந்துள்ளது. நிலத்தினால் சூழப்பட்ட பூட்டானில் இயற்கையின் மற்றுமொரு அங்கமான பள்ளத்தாக்குகள், மலைமேடுகள், பல வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள புத்த மத ஆலயங்கள், ரக ரகமான உணவு வகைகள் என ரசிப்பதற்கும், நிம்மதியாக சுற்றுலாவை அனுபவிப்பதற்குமான சூழல் நிறைந்த இடம். இங்கு செல்ல அடையாள அட்டைகளே போதும். 

மேலதிக விவரங்களுக்கு: https://www.bhutan.travel/

3) இந்தோனேசியா:

இந்தோனேசியா என கேட்டவுடன் சட்டென நினைவுக்கு வருவது சுனாமியும் நிலநடுக்கமும் தான். ஆமாம், “தீவுனா சும்மாவா அப்போ அப்போ அப்டி இருக்கத்தான் செய்யும்”. ஆனால், இந்தோனேசியாவின் அழகு மிகு இயற்கையை காண கோடி கண்கள் வேண்டும். அழகுனா அழகு அப்டி ஒரு அழகு தேசம். முக்கியமாக பார்க்க வேண்டிய பகுதி: பாலி தீவு. இது உலகின் சிறந்த சுற்றுலாப்பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு: https://www.indonesia-tourism.com/

4) செர்பியா:

தென் கிழக்கு ஐரோப்ப நாடுகளில் உள்ள ஒரு நிலத்தால் ஆன சூழல் மிகுந்தது செர்பியா. இங்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விசா வேண்டும் என அவசியமில்லை. டூரிஸ்ட் பாஸ் இருந்தால் போதும். அது 60 நாள்களுக்கு செல்லும். அழகியலுடன் கட்டப்பட்ட பல பேராலயங்கள், வரலாற்று சின்னங்கள் நிறைந்த நாடு. 

 மேலதிக விவரங்களுக்கு: http://www.serbia.travel/home.779.html

5) குக் தீவுகள்:

நியூசிலாந்துடன் இணைந்து தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவுதான் குக் தீவுகள். மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இதயத்தை துடிக்க வைக்கும் தன்மை கொண்டது குக் தீவுகள். 31 நாட்கள் விசா இல்லாமல் குக் தீவுகளுக்கு சென்று வரலாம். ஹனிமூன் செல்லவும், கேங் ட்ரிப்-க்கு இந்த தீவு ஏதுவாக அமையும்.

மேலதிக விவரங்களுக்கு: https://cookislands.travel/

6) குயானா:

குயானா. இது, தென் அமெரிக்காவின் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. விசா இல்லாமல் 30 நாட்களுக்கு சுற்றுலாவுக்குச் செல்லலாம். காடுகளும், கடல்களும் நிறைந்த பகுதி.

மேலதிக விவரங்களுக்கு: https://www.guyanatourism.com/

7) செயின்ட் வின்செண்ட் & தி கிரேனெடின்ஸ்:

இது,  தெற்கு கரீபியன் நாடுகளில் ஒன்றாகும். 32 தீவுகளை உள்ளடக்கிய நாடு செயின் வின்செண்ட் & தி கிரேனெடின்ஸ். டூரிஸ்ட் பாஸில் 60 நாட்களுக்கு இங்கு தங்கலாம். போட்டிங், கார்டனிங், சைட் சீயிங் என இயற்கையை பல வழிகளில் காணக் கிடக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு: http://www.svgtourism.com/

News Counter: 
100
Loading...

janani