பேட்ட, விஸ்வாசம் படங்களின் ஃபர்ஸ்ட் டே கலக்‌ஷன் தெரியுமா?..

Classic

பேட்ட, விஸ்வாசம் படங்களின் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கல் வெளியாகி உள்ளன.

பேட்ட படம் வெளியான முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 23 கோடியும், உலகளவிலான வசூல் சுமார் 48 கோடியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் விஸ்வாசம் தமிழகத்தில் 26 கோடியும், உலகளவில் சுமார் 43 கோடியும்  வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் இரண்டு படங்களின் இன்னும் அதிகளவில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

aravind