மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்...

share on:
Classic

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றிலேயே கத்திரிக்கோலை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராத்தை சேர்ந்த மகேஸ்வர் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக அங்குள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, டாக்டர் வீரப்பா தலைமையில் 3 மருத்துவர்கள் நவம்பர் 1-ம் தேதி மகேஸ்வரிக்கு அறுவைசிகிச்சை செய்தனர். அதனைத்தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்ட மகேஸ்வரிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது.

கடந்த 7-ம் தேதி மகேஸ்வரி மீண்டும் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்த போது, எக்ஸ்-ரேவில்(X-Ray) அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் அவரது வயிற்றில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கத்திரிக்கொலை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இதுகுறித்து டாக்டர் வீராப்பா உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya