மருத்துவர்கள் போராட்டதிற்கு தீர்வு கான தமிழக அரசுக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை..!!

share on:
Classic

ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு, ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடைமுறைபடுத்த பேண்டும். பட்ட மேற்படிப்பு படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். நான்காவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருவதால் மருத்துவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டு போராடும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போல் அன்புமணி ராமதாஸ் மற்றும் மு.க ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள்,போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan