close
முகப்புநோயாளியின் உடைந்த கால் அவருக்கே தலையணையாக பயன்படுத்தப்பட்ட அவலம்

நோயாளியின் உடைந்த கால் அவருக்கே தலையணையாக பயன்படுத்தப்பட்ட அவலம்

நோயாளியின் உடைந்த கால் அவருக்கே தலையணையாக பயன்படுத்தப்பட்ட அவலம்

கால் உடைந்ததற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு , உடைந்த காலையே தலையணையாக உபயோகித்த அவல நிலை உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.

25 வயதான கான்சியம் என்பவர் பள்ளி பேருந்தில் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். பள்ளி பேருந்துக்கு ஏற்பட்ட விபத்தில் கான்சியத்திற்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து ,அவரை ஜான்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலங்களில் மிகச் சிறந்த மருத்துவமனையாக இது கருதப்பட்டு வருகிறது. நோயாளிக்கு தலையணை இல்லாத காரணத்தால் அவரது உடைந்த கால்-ஐ தலையணையாக வைத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.