உடம்பில் கொழுப்பு கட்டிகள் உள்ளதா..? உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

மரபணுக்கள் உடல் பருமன் அல்லது அதிகபடியான கொழுப்பு படிவதால் இந்த கட்டிகள் உருவாகிறது.

இன்றைய நவீன உலகில் இந்த கட்டிகளைப் போக்க அறுவை சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இப்படி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தாலும் அந்த இடத்தில் மீண்டும் கட்டிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இவற்றை இயற்கை முறையில் சரி செய்யும் சில முறைகளை பார்ப்போம்:

தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கட்டிகள் மீது தடவி அதன் மீது பேண்டேஜ்ஜை ஒட்ட வேண்டும். 24 மணி நேரம் கழித்து கழுவி மீண்டும் புதிய கலவையை போட வேண்டும். இப்படி 8 நாட்கள் செய்து வந்தால் கொழுப்பு திசுக்கள் கரைந்திருப்பதை காணலாம்.

தேன் மற்றும் மாவுக்கலவை வெளி காயங்கள் மற்றும் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதிலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிகளை கரையச் செய்து அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தை தூண்டும்.

ஆரஞ்சு பழம் :
பல வைட்டமின் சத்துக்களையும் அமில தன்மையும் கொண்டது ஆரஞ்சு பழம். இந்த பழ சுளைகளை அவ்வப்போது மென்று தின்று வருவதால் உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து கொழுப்பு கட்டிகளை நீக்கும். விதையுள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

உடற்பயிற்சி:  சாப்பிட்ட உடனேயே சிலர் உடலியக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதாலும், உறங்குவதாலும் அவர்களின் உடலில் அவர்கள் சாப்பிட்ட உணவகளிலுள்ள கொழுப்புகள் அவர்களின் உடல் திசுக்களில் சேர்வதால் இப்படிப்பட்டவர்களுக்கு கொழுப்பு கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவ்வப்போது உடலியக்கம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் இக்கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan