ஒரு நபர் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறதா?

share on:
Classic

ஒருநபர் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படமாட்டது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஒரே குடும்பத்தில் அதிகமான ஸ்மார்ட் கார்டுகள் வைத்துள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ஒரு நபர் ஸ்மார்ட் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறையாக ஒருநபர் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரேசன் பொருள் விநியோகம் நிறுத்தப்படாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

News Counter: 
100
Loading...

aravind