14 பேரை கடித்து குதறிய வெறி நாய்..ஆந்திராவில் அதிர்ச்சி..!

share on:
Classic

ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாய் 14 பேரை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காஞ்சிகச்சார்லா பகுதியில்  இன்று காலை நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்களை நோக்கி அங்கிருந்த நாய் ஒன்று கடிக்க தொடங்கியது. வெறிபிடித்த அந்த நாய் கடித்ததில் காயமடைந்த 14 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தினமும் 6 முதல் 8 பேர் வரை நாய் கடித்ததற்கு சிகிச்சை பெற வருகின்றனர் என்றும், இது குறித்து புகார் அளித்தும் பஞ்சாயத்துத்துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind