நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு ..!

share on:
Classic

அதிக எடை மனிதர்களுக்கு மட்டும் தான் ஆப்பு வைக்கிறது என்று நீங்கள் நினைத்தால், கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அதிக எடை நாய்களின் ஆயுளுக்கும் ஆப்பு வைக்கிறது என்பதே உண்மை.

நாய் என்னும் நண்பன் :

மனிதர்களுக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணிகளில், முதல் இடத்தில் இருப்பது நாய்கள் தான். தங்கள் எஜமான்களுக்காக உயிரையும் கொடுக்கும் இயல்புடையது நாய்.அதனால் பலரும் தங்கள் வீடுகளில் நாய்களை பிரியமுடன் வளர்த்து வருகின்றனர்.அதுவும் கொழு கொழு நாய்கள் தான் பலரது விருப்பம். இதனால் தான் பலர் தங்கள் நாயின் மேல் அன்பு காட்டுவதாக நினைத்து, உணவு வகைகளை வாரி வழங்கி  கொண்டே இருப்பார்கள். மேலும் மனிதர்கள் சாப்பிட்ட மிச்சம் மீதியும் நாய்களுக்கு தான் போய் சேர்கின்றன. 
 

அதிக எடையுள்ள நாய்களுக்கு வரும் ஆபத்துகள் :

லண்டனில் 50,000 நாய்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக எடையுள்ள நாய்க்கள் வெறும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வதாகவும், எடை குறைவான நாய்கள் அதிக ஆயுளோடு நீண்ட ஆண்டுகள் உயிர் வாழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிக எடையுள்ள நாய்களுக்கு மூட்டு வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவு பொருட்கள் புற்றுநோய்க்கும் வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 

 
 பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் :

உடல் எடை அதிகமான நாய்களே ஆரோக்கியமாக இருக்கின்றது என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.இதனை பொய்யாக்கியுள்ளது இந்த ஆய்வு. இனி உங்கள் செல்ல பிராணிகளுக்கு தேவையான அதிகமான ருசீகர உணவு இல்லை, மாறாக சத்தான உணவுகளே என்பது உறுதியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu