திரும்பத் திரும்ப பேசுற நீ...செய்தியாளர் சந்திப்பில் கோபமடைந்த ட்ரம்ப்..!

share on:
Classic

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கோபமடையச் செய்த சி.என்.என் செய்தியாளருக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி தனது செல்வாக்கை இழந்ததைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, சி.என்.என் ஊடகத்தின் செய்தியாளர் அக்கோஸ்ட்டா, அமெரிக்காவினுள் குடியேறும் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு முதலில் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்த டிரம்ப், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்தார். 

அக்கோஸ்ட்டாவின் அடுக்கடுக்கான கேள்விகளிலிருந்து தப்பிக்க முயன்ற டிரம்ப், அவரிடமிருந்து மைக்கை பறிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், வெள்ளை  மாளிகை அதிகாரிகள் எவ்வளவு முயன்றும் அக்கோஸ்ட்டாவிடமிருந்து மைக்கை கைப்பற்ற முடியவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப், சி.என்.என் ஊடகத்தினரை மோசமானவர்கள் என்று கூறி, மேடையை விட்டு நகர்ந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், செய்தியாளர் அக்கோஸ்ட்டா வரம்பு மீறி செயல்பட்டதாகவும், அவர் இனி வெள்ளை மாளிகைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள அக்கோஸ்ட்டா, பொய்கள் நிறைந்த வார்த்தைகளை வெள்ளை மாளிகை உச்சரிப்பதாக கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind