ஆன்லைன் ஷாப்பிங்.... அட்வான்ட்டேஜ் எடுக்காதீங்க !

Classic

பண்டிகைக் காலம் வந்தாச்சு. டிரஸ் எடுக்க பம்பரமாய் சுற்றிய காலம் போய் உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் செய்யும் பழக்கம் வந்தாச்சு.

இந்தமுறை மிக எளிதாக இருந்தாலும் சற்று சிந்தியுங்கள். உற்றார் உறவினரோடு வீதியில் நடந்து காற்று வாங்கி கூட்டத்தில் களைத்து வேர்த்து விறுவிறுத்து அப்பா டா என கீழே உட்கார்ந்து இரவு நீங்கள் வாங்கிய டிரஸ் கவரை பிரிக்கும் போது வரும் ஆனந்தம் மறந்து போனதா? 

உஷார் மக்களே !  .... அதிரடி சலுகைகளுடன் அமேசான் விற்பனை என்றவுடன் வாங்கும் முன் சற்று சிந்தியுங்கள். நீங்கள் வாங்கும் பொருட்களால் பயன் அடைவோர் ஏ.சி இருக்கையில் ஓசி காற்று வாங்கும் ஒரு சிலரே.

இன்றில் இருந்தாவது அங்காடித் தெருக்களில் அலைந்து, திரிந்து, கூவி விற்பனை செய்யும் சாமானியனிடம் பொருட்களை பேரம் பேசாமல் வாங்க கற்றுக்கொள்ளுங்கள். இவை சமீப காலமாக வாட்ஸ் ஆப்பில் வளம் வரும் செய்தி. 

News Counter: 
100
Loading...

sankaravadivu