திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க விடமாட்டோம்..

share on:
Classic

திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைக்க விரும்பும் மத்திய அரசின் முயற்சியை மாநில அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்று கேரள முதலமைச்சர் தெரிவித்தார். 

கேரளா மாநில சட்டசபையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “மாநில அரசின் விருப்பத்தையும், கோரிக்கையையும் புறக்கணித்து விட்டு, விமானநிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது. மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் உதவியின்றி எந்த தனியார் நிறுவனமும் விமானநிலையத்தை மேம்படுத்த முடியாது. நாங்கள் இந்த பிரச்சனையை பலமுறை எழுப்பியுள்ளோம். மேலும் நாளை (ஜூன் 15)  நடைபெற உள்ள நித்தி ஆயோக் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் மாநில அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க உள்ளேன். விமானநிலையம் மேலாண்மையில் எந்த அனுபவமும் இல்லாத தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கு திட்டத்தை எதிர்க்க தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும்” என்று தெரிவித்தார்.

விமானநிலையங்களுக்கான ஆணையம் (Airport Authority of India) இந்தியாவில் உள்ள 6 விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தது.  அதில் திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையமும் ஒன்றாகும்,இதற்கான ஏலத்தில் மாநில அரசின் ஆதரவு நிறுவனமான கே.எஸ்.ஐ.டி.சி மற்றும் தனியார் நிறுவனமான ஜி.எம்.ஆர் ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி அதானி குழுமம் முதலிடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

Ramya