தோனி மீது கருணை காட்டாதீர்கள் உடனே அணியில் இருந்து வெளியேற்றுங்கள் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பதிவு..!

share on:
Classic

தோனி மீது கருணை காட்டாதீர்கள் உடனே அணியில் இருந்து வெளியேற்றுங்கள் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பதிவு..!  

இந்திய அணி அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில்  கூடிய விரைவில் இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் தோனி குறித்து ஒரு சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதனை பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அந்த சர்ச்சையான ரீ ட்வீட் செய்துள்ளார். 

அந்த ட்விட்டில் இந்திய அணி தோனிக்கு கருணை காட்டக்கூடாது. அவரை அணியில் இருந்து உடனே நீக்க வேண்டும். ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் தோனி அரசியல் மற்றும் ஃபிக்ஸிங்கை கொண்டுவருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ட்விட் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தோனி ரசிகர்கள் பாகிஸ்தான் அமைச்சரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Saravanan