"தோனி ஸ்டம்ப் பின்னாடி நின்னா மட்டும், கோட்டை தாண்டாதீங்க" கிண்டலடித்த ஐசிசி

share on:
Classic

நியூஸிலாந்து அணியுடன் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் அபாரமாக விக்கெட் வீழ்த்திய 'தோனி'யை புகழ்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4- 1 என்ற கணக்கில் அபாரமாக வென்று அசத்தியது இந்திய அணி. கடைசி ஆட்டத்தில் வெற்றி உறுதியாகிவிட்ட போதும் கூட 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தின் போது நியூசிலாந்து வீரர் 'ஜிம்மி நேஷம்மின்' விக்கெட்டை 'தோனி' எடுத்த விதம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 

இதனையடுத்து நியூ யார்க் ரசிகர் ஒருவர் "எங்கள் மனம் ஆறுதலடையும் படி ஏதாவது அறிவுரை கூறுங்கள்" என்று ஐசிசி-யின்  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஐசிசி "விக்கெட் எடுக்க தோனி ஸ்டம்ப் பின்னாடி நிற்கும் போது மட்டும், ரன் எடுக்க கோட்டை தாண்டாதீர்கள்" என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளது. தோனியை புகழ்ந்து தள்ளிய அந்த டுவிட்டை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அந்த பதிவிற்கு கீழ் ஆயிரக்கணக்கான தோனி ரசிகர்கள் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். 

News Counter: 
100
Loading...

youtube