அரசியலில் அதிக ஆர்வம் இல்லை : பிரபல நடிகர் திட்டவட்டம்..

share on:
Classic

அரசியலில் அதிக ஆர்வம் இல்லை என்று மெகா ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார். 

400 படங்களுக்கு மேல் நடித்து மலையாள திரையுலகின் மெகா ஸ்டாராக விளங்குபவர் மம்முட்டி. அழகன், தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான முத்திரையை பதித்தவர். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான பேரன்பு திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும் மலையாள திரையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மாமங்கம் படத்தில் மம்முட்டி பல தோற்றங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் நடைபெறும் மாமங்கம் விழாவை மையமாக கொண்டு உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் அரசியலில் ஈடுபடும் எந்த நோக்கமும் தனக்கில்லை என்று தெரிவித்தார். மேலும் “ அரசியலில் எனக்கு எப்போதுமே அதிக ஆர்வம் இருந்ததில்லை. அரசியல் செயல்பாடுகளிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று மம்முட்டி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya