ரம்ஜான் குறித்து சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம் : திரிணாமூல் காங்கிரஸ் தலைவருக்கு ஓவைசி பதிலடி..

share on:
Classic

ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடத்துவதால் முஸ்லீம்கள் வாக்களிப்பது பாதிக்கப்படும் என்ற திரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு அசாதுதின் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதுகுறித்த பேசிய திரிணாமூல் கட்சி தலைவரும், மேற்கு வங்க மேயருமான ஃபிர்ஹத் ஹக்கிம் “இந்திய அரசியலமைப்பின் அங்கமான தேர்தல் ஆணையத்தை நாம் மதிக்க வேண்டும். அதற்கு எதிராக நாம் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது. ஆனால் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள மக்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது. அதிலும் குறிப்பாக ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் மக்களுக்கு அது மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் எம்.பியான அசாதுதின் ஒவைசி “முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று நிச்சயமாக நோன்பிருப்பார்கள். ஆனால் அப்போது அவர்கள் வெளியில் செல்வார்கள், அலுவலகம் செல்வார்கள், இயல்பான வாழ்க்கையையே மேற்கொள்வார்கள். ஏழையிலும் ஏழை மக்கள் கூட ரம்ஜான் நோன்பு மேற்கொள்வார்கள். எனவே இந்த ரம்ஜான் மாதத்தில் வாக்குப்பதிவு மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இது முற்றிலும் தேவையில்லாத சர்ச்சை. எந்த காரணத்திற்காகவும் முஸ்லீம்கள் மற்றும் ரம்ஜான் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் பயன்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya