இந்த அருவிக்கு போனா 18 அடி உயர ராஜநாகங்களை பாக்கலாம்

share on:
tourism
Classic

கூர்க்கில் உள்ள அழகிய சுற்றுலா தளம் இருப்பு அருவி..கோனேகொப்பேவில் இருந்து 30 கிமீட்டர் தொலைவிலும் மடிகேரியில் இருந்து 80 கிமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.பிரம்மகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த அருவி ஆன்மிக தளமாகவும் அறியப்படுகிறது.அந்த அருவிநீர் செல்லும் ஓடைக்குப் பெயர் 'லட்சுமணதீர்த்தா'. இராமனும், இலட்சுமணனும் சீதையைத் தேடி காட்டில் அலைந்தபோது இந்தப் பக்கமாக வந்தார்களாம். அப்போது இராமனுக்கு தாகம் எடுக்கவே, தண்ணீர் தேடி அருகில் தண்ணீர் எங்கும் கிடைக்காததால் லட்சுமணன் ஒரு பாறையில் அம்பு எய்தி தண்ணீர் வர வைத்தாராம்.. அது தான் லட்சுண தீர்த்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்..

இந்த அருவியில் குளித்தால் பாவம் தீரும் என்பதற்காக சிவராத்திரி தினம் 100 க்கணக்காண பக்தர்கள் இங்கு வருவார்களாம்..

காலை 8 மணிக்கே சென்றுவிட்டதால் நாங்கள் தான் முதலாவதாக உள்ளே சென்றோம்..இங்கு ஒருவருக்கு 55 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. நுழைவு வாயிலில் இருந்து 1 1/2 கிலோ மீட்டர் காட்டிற்குள் நடக்க வேண்டும்.. பாதை தொடக்கத்தில் அரச மரத்து பிள்ளையார் நம்மை வரவேற்கிறார்..

அண்ணாந்து பார்த்தால் பிரம்மாண்ட பிரம்மகிரி மலைத்தொடர்.போகும் போது பாதையின் நடுவே தான் செல்ல வேண்டும் . செடி ஓரத்தில் நடக்க கூடாது. ஏனென்றால் அட்டை உடல் மழுவதும் ஒட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

கொஞ்ச தூரம் உள்ளே சல சல வென்று தண்ணீர் ஓடும் சத்தம்..ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கு பாலம் வருகிறது. அதை கடந்ததும் படிகளில் ஏற வேண்டும்..இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்திருக்க காற்றில் ஈரப்பதம் அதிகரித்திருக்க நடக்கும் போதே உற்சாகமாக இருக்கும்.

படிகளில் ஏறிசென்றதும் கொஞ்ச தூரத்தில் அருவி காட்சியளித்தது.. அங்கு அருவிளை ரசிக்க பென்ச் மற்றும் தடுப்பு அமைத்திருக்கிறார்கள். ஆனால் முழுமையாக பார்க்க இன்னும் கொஞ்சம் மேலே செல்ல வேண்டும்..

மேலே சென்றதும் வானுயர்ந்த பாறையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது இருப்பு அருவி.. அருகே சென்றதும் மூலிகைகள் கலந்த அருவியின் சாரல் மூச்சுக்கு இதமாக இருக்கும்.. தண்ணீரை கடந்து பாறைகளில் ஏறி மறுபக்கம் செல்லலாம்.. 

இந்த இருப்பு அருவி உள்ள காடுகளில் 18 அடி வரை லளரும் ராஜநாகங்கள் ள்ளன.

இந்த மலையில் டிரெக்கிங் செல்லும் வசதி கூட இருக்கிறது..

News Counter: 
100
Loading...

admin