ஆணாதிக்கம் மிக்கவர்கள் 90ML படத்தை பார்க்காதீர்கள் - ஓவியா

share on:
Classic

ஆணாதிக்கம் மிக்கவர்கள் தயவுசெய்து 90ML படத்தை பார்க்காதீர்கள் என்று ஓவியா தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 1 மூலம் புகழ்பெற்ற ஓவியா தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்றது மட்டுமில்லாமல் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே ஓவியா ஆர்மி என்ற பெயரில் உருவாகும் அளவுக்கு பிரபலமானார். இந்நிலையில் ஓவியா, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிதா உதீப் இயக்கி உள்ள 90ML படம் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ஓவியா படத்தை பார்ப்பதற்கு முன் அது எப்படிப்பட்ட படம் என்று தீர்மானிக்க கூடாது என்று தெரிவித்தார். 

இந்நிலையில் ஓவியா இதுகுறித்து பேசிய போது “பெண்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இருப்பதால் நிச்சயம் கலாச்சார ரீதியாக சிலருக்கு இந்த படம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த படமும் அப்படி இருக்காது. ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது படத்தின் ஒரு பகுதி தான். இது வெறும் படம் மட்டும் தான். உங்கள் கலாச்சாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலோ அல்லது நீங்கள் ஒரு ஆணாதிக்க மிக்கவராக இருந்தாலோ தயவுசெய்து 90ML படத்தை பார்க்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

ஓவியா இது போன்ற படங்களில் நடிக்க கூடாது என்றும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார் எனவும் சமூக வளைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இது குறித்து அவரிடம் கேட்ட போது “மக்கள் திரைப் பிரபலங்களை ஏன் ரோல் மாடலாக நினைக்கிறார்கள். என்னுடைய பெற்றோர் தான் எனக்கு ரோல் மாடல். நான் அவர்களை தான் பின்பற்றுகிறேன். நீங்கள் உண்மையிலேயே என்னை ரோல் மாடலாக நினைத்தால், ஏன் நீங்கள் என்னுடைய நிஜ வாழ்க்கையை ஏன் பின்பற்றக்கூடாது” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya