யாருடன் கூட்டணி.. பிரதமர் மோடி ஓபன் டாக்..!

Classic

தமிழகத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணி இருக்கும் என்றும், கட்டாயத்தில் இருக்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தமிழக பாஜகவினருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர் மற்றும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, அதிமுக, ரஜினி மற்றும் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணி இருக்கும், கட்டாயத்தில் இருக்காது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தயாராக உள்ளதாகவும், அரசியல் கட்சிகளுக்காக கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காட்டிய வழியை பின்பற்ற உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும் கூட்டணிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்கவே விருப்பம் என்றும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind