"எத்தனை வித்தைகள் செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது"

share on:
Classic

தமிழகத்தில் எத்தனை வித்தைகள் செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இதுவென்றும், இந்திபேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan