'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' பழமொழிக்கான காரணம் தெரியுமா ?

Classic

'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என வீடுகளில் பயன்படுத்துவதுண்டு. இந்தப் பழமொழிக்கான காரணம் தெரியுமா ? இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றும் போது அதன் சத்துக்கள் செடிகளுக்கு சென்று அதன் வழியே வரும் காய்கறிகளை நாம் உண்ணும் பொழுது நமது உடல் வலிமை பெரும் என்பது பொருள். 

செம்பு பாத்திரத்தில் அத்தகைய நன்மை உள்ளது. இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து விட்டு காலையில் அதனை அருந்தினால் உடல் தூய்மை அடையும். நாள் முழுமையும் சுறுசுறுப்பாக இருக்கும். 

செம்பு பாத்திரத்தில் உள்ள செம்புத் தாது நமது உடலுக்கு வலிமையை சேர்க்கக்கூடியது. 

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தும் போது நமது உடல் உறுப்பு சுறுசுறுப்பாக வேலை செய்கின்றது. 

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தும் முன்னர் அதில் துளசி, சீரகம், புதினா போன்றவற்றை நீருடன் சேர்த்து அருந்தும் போது உடலுக்கு கூடுதல் வலிமை கிடைக்கும். 

செம்பு பாத்திர நீரை குழந்தைகள் பருகி வர சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக செயல்படுவர். 

News Counter: 
100
Loading...

sankaravadivu