குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய நடிகர் சக்தி

share on:
Classic

நடிகர் சக்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இயக்குனர் வாசுவின் மகனும், நடிகருமான சக்தி சென்னை சூளைமேடு பகுதியில் காரை ஓட்டிச்சென்றார். குடிபோதையில் இருந்த அவர், செல்வம் என்பவரின் காரின் மீது மோதியுள்ளார். இதில் கார் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் காவல்துறையினர், நிகழ்விடத்துக்கு சென்று குடிபோதையில் இருந்த நடிகர் சக்தியை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth