குடிபோதையில் பெற்ற குழந்தைகளையே கொண்ற கொடூர தந்தை...கோவையில் அதிர்ச்சி..!

share on:
Murder New Covai
Classic

கோவையில் மனைவியுடனான தகராறு காரணமாக இருமகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன்.இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி மாற்று திறனாளி என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களுடன் பத்மநாபனின் தாயார் பிரேமாவும் உடன் தங்கியிருந்தார்.

பத்மநாபன் குடிபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால், பத்மநாபனுக்கும், அவரது மனைவிக்கும் இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  நேற்று இரவு  வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பத்மநாபன் அவர் மனைவியை வீட்டுக்கு சென்று 75,000 பணம் வாங்கி வரும்படி தகராறு செய்துள்ளார். பின் வாக்குவாதம் முற்றியதால் மனைவியையும், தாயையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி சண்டைப் போட்டுள்ளார்.   இது குறித்து போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் இருவரையும் காலையில் காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளனர்.

இதனால் மனைவி செல்வராணி தனது தாய் வீட்டுக்கும், தாயார் பிரேமா பக்கத்து வீட்டிக்கும் தூங்கச் சென்றுள்ளனர்.  இதன் பின்னர், அளவுக்கடந்த போதையில் இருந்த பத்மநாபன் வீட்டிலேயே குழந்தைகளுடன் தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை பாட்டி பிரேமா வீட்டிற்கு வ்நத இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்து போன அவர், மகனை தேடியுள்ளார். பத்மநாபனையும் காணவில்லை. 

உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் பிரேமா.  விரைந்து வந்த சிங்கநல்லூர் போலீசார் இறந்து கிடந்த அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்த முதற்கட்ட விசாரணையில் இறந்த குழந்தைகளின் உடலில் ரத்த கறை எதுவும் இல்லாததால், அவர்கள் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், தலைமறைவான கொடூர தந்தையை போலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

youtube