டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் இன்று உத்தரவு

Classic

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது கோவை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. கடந்த 2015 ஆகஸ்ட் 18ல் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரிக்கக் கோரி விஷ்ணுபிரியா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை முறையாக நடப்பதால், தாங்கள் விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று சிபிஐ பதிலளித்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மனு மீது கோவை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

News Counter: 
100
Loading...

sasikanth