ஏர்டெல் DTHக்கு புதிய கட்டண விதிமுறைகளை வகுத்த TRAI..!!

share on:
Classic

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI ஆனது ஏர்டெல் DTHக்கு புதிய கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது

TRAI இன் விதிமுறைகள் படி டிடி.ஹெச் ஆப்ரேட்டர்கள், வாடிக்கையாளர்கள் அனுமதியில்லாமல் கூடுதல் சேனல்கள் வழங்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசுலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிடி.ஹெச் ஆப்ரேட்டர்கள் சிலருக்கு குறைந்த சேனல்களும் வழங்கி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது சம்மந்தமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க இலவச சேவை எண்களையும் தொடர்பு கொள்ள முடிவதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, 1997 ஆம் ஆண்டின் டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் இந்திய சட்ட பிரிவு 11 ன் துணை பிரிவு (1) மற்றும் பிரிவு 13 ன் கீழ் மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் ட்ராய் வகுத்துள்ள புதிய கட்டண விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஏர்டெல் DTHக்கு TRAI  உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan