வறட்சியால் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் : வனத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..

share on:
Classic

மணப்பாறை அருகே உணவு, தண்ணீரின்றி வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் குரங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கருப்பூர் வனக்கட்டுப்பாட்டில் உள்ள காயாம்பூ மலை, பொகஞ்சி மலை, கொசவன் மலை, திண்ணை மேடு மலை சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் குரங்குகள் வாழ்ந்துவருகின்றது.  தற்போதுள்ள கடுமையான வறட்சியால் வனத்துக்குள் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு காணப்படுகிறது. காண்பதற்கு கூட கண்கூசும் அளவுக்கு வறண்டுபோன இந்த வனத்தில் வாழ்வாதாரத்துக்கே தவித்து போயி உள்ளன வன உயிரினங்கள். குறிப்பாக வறட்சி தாங்காமல் ஊருக்குள் வரும் குரங்குகளுக்கு விவசாய நிலங்களிலும், கிணறுகளிலும் கூட உணவு, தண்ணீர் கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. குரங்குகளை காப்பாற்ற வனத்திற்குள் ஆங்காங்கே சின்ன தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுவட்டார மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

News Counter: 
100
Loading...

Ramya