கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்தம்..

share on:
Classic

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்தம்..

இன்று மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். அவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் விளைவாக இந்திய அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்த நிலையில் ராகுல் 78 பந்துகளுக்கு 57 ரன்கள் சேர்த்து சோயிப் மாலிக் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், களமிறங்கிய கோலியுடன் இணைந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து வந்த தோனி, வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்திய அணி 46.4 ரன்னில் 305 ரன்கள் சேர்த்த நிலையில், மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது, கோலி 71 ரன்னுடனும் விஜய் சங்கர் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர்

News Counter: 
100
Loading...

Saravanan