துல்கர் சல்மான் படத்திற்கு க்ளாப் அடித்து துவங்கி வைத்த கே.எஸ்.ரவிகுமார்

share on:
Classic

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். ரிது வர்மா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு யமந்தன் ப்ரேமகதா என்ற மலையாளப் படத்திலும் த ஸோயா பேக்டர் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார் .  துல்கர் நடிப்பில் வான் என்ற தமிழ்ப்படம் உருவாக இருக்கிறது. ரா.கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தில் கிர்த்தி கர்பந்தா மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். கெனன்யா ஃபிலிம்ஸ் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தீனதயாளன் இசையமைக்க ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு க்ளாப் அடித்து வைத்தார். 

News Counter: 
100
Loading...

youtube