வருமான வரி சோதனை..நீதிமன்றத்திற்கு சென்ற துரைமுருகனின் மகன்..!

share on:
Classic

வருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் முறையிட்டுள்ளார். 

வாக்கு சேகரிக்க செல்ல விடாமல் தன்னை முடக்கி வைக்க முயற்சி நடப்பதாக கதிர் ஆனந்த் புகார் கூறியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்றும் அவர் தெரிவித்தார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sajeev