துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

Classic

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை கீழமை நீதிமன்றம் விடுவித்து விட்டதாகவும், தற்போது வழக்கு நிலுவையில் இல்லாததால் பாஸ்போர்ட் வழங்க மறுத்த உத்தரவு தவறு என்றும் துரைமுருகன் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, பாஸ்போர்ட் வழங்க கோரிய விண்ணப்பத்தை திருப்பி அளித்து, பாஸ்போர்ட் மண்டலம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் விண்ணப்பித்தால் நான்கு வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

youtube