டெல்லியில் மீண்டும் புழுதி புயல்

Classic

டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல் தாக்கியது. மரங்கள் சாய்ந்ததால் சில மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

டெல்லியில் இரண்டு நாட்களாக கடும் வெயில் அடித்துக்கொண்டிருந்த நிலையில் , இன்று அதிகாலை புழுதி புயலை தொடர்ந்து லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று குறைவாக இருக்கிறது. பலத்த காற்றுடன் வந்த புழுதி புயலால் மரங்கள் சாய்ந்தன. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இதில் சேதமடைந்தது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் அடுத்த நான்கு நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், ராஜல்தான் , உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழ்நாரு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம்  கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

News Counter: 
212

Parkavi