உயிரைக்குடித்த பேஸ்புக் காதல்..16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!

share on:
Classic

நெதர்லாந்தின் 16 வயது சிறுமி, பேஸ்புக் காதல் தோல்வி காரணமாக 31 வயது ஆண் நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

'ஹுமெய்ரா' என்ற அந்த சிறுமி நெதர்லாந்தின் ரோட்டர்டாம் டிசைன் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் தனது நண்பர்களுடன் பைக் ஷெட்டில் நின்றுகொண்டிருந்த போது ,அங்கு வந்த அந்த நபர் திடீரன்று ஹுமெய்ராவை நோக்கி சுட ஆரம்பித்தார்.இதில் நிலை குலைந்து போன அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விசாரணையில் அந்த சிறுமியும் ,அவளை சுட்ட 'பெக்கிர்'  என்ற அந்த இளைஞரும் பேஸ் புக் மூலமாக காதலித்துள்ளனர்.கொஞ்ச காலத்திலேயே அந்த காதல் முறிந்துவிட . தன்னை காதலிக்குமாறு அந்த நபர் தொடர்ந்து சிறுமியை மிரட்டி வந்த அவர், ஒருகட்டத்தில் இந்த படுகொலை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.இதனால் அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

News Counter: 
100
Loading...

youtube