"எனக்கு End-ஏ கிடையாதுடா"...2-வது முறையாக ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்..!!

share on:
Classic

கடந்த சில மாதங்களுக்கு தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில் இரண்டாவது முறையாகவும் அதே போல் ரசிகர் ஒருவரின் போனை தட்டி விட்டுள்ளார் சிவகுமார்.

முன்பு விழா ஒன்றுக்கு சென்ற சிவகுமாரை பார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்ற போது, அவரது மொபைல் போனை தட்டி விட்டார் நடிகர் சிவகுமார். மேலும் "அவர் தட்டி விட்டதால் என் போன் உடைந்து விட்டது" என்று அந்த ரசிகரும் புகார் அளித்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சிவகுமாரை கலாய்த்து, செய்தே விட்டனர் என்றே சொல்லலாம் . மீம்களும், ட்ரோல்களும் டன் கணக்கில் குவிந்தன. கடுமையான எதிர்பலைகளுக்கு பிறகு இது பற்றி பேசிய அவர், இளைய தலைமுறையின் இந்த செல்பி பழக்கம் தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறி கடைசிவரை மன்னிப்பு கேட்காமல், அந்த தவறுக்காக வருந்துகிறேன் என்று மட்டும் சொல்லி முடித்தார். அந்த இளைஞரை அழைத்த அவர், புது மொபைல் போன் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். அதற்கு பின்பு தான் நெட்டிசன்கள் அமைதி காத்தனர்.

எல்லாம் சரியாக தான் போய் கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் போது தான், அதே போல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகுமாரிடம் செல்பி எடுக்க இளைஞர் ஒருவர் மொபைல் போனை தூக்குகிறார். முதலில் அதை கண்டுக்காதது போல் வந்தாலும் அருகே வந்ததும் அந்த போனை தட்டி விட்டு சென்றுகொண்டே இருக்கிறார் சிவகுமார். அதிர்ச்சியடைந்த அந்த  இளைஞர் அந்த போனை தேடி அலைகிறார். அவரோ அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் போய் கொண்டே இருக்கிறார்.

இரண்டாவது முறையாக நடந்திருக்கும் இந்த செயலை பார்த்து சிரிப்பதா, கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இந்நிலையில் ஒரு முறை பட்டும் அவர் திருந்தவில்லையே என்று ஒரு தரப்பினரும், அந்த ரசிகருக்கு அவரை பற்றி தெரியாதா,ஏன் தெரிந்தே வம்புக்கு இழுக்கிறார் என்று மறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னும் எத்தனை போன்களை உடைக்க போகிறாரோ இந்த 2.0 அக்ஷய் குமார். எது எப்படியோ இதனால் பலன் அடைந்திருப்பது ஒரு கும்பல் மட்டும் தான். ஆம் நீண்ட நாட்களாக சரியான கான்செப்ட் எதுவும் கிடைக்காமல் தேடி கொண்டிருந்த மீம் கிரியேட்டர்ஸ் காட்டில் தான் பேய் மழை !!

News Counter: 
100
Loading...

vinoth