காது வலியால் அவதியா..?? உங்களுக்கான டிப்ஸ்...!!

share on:
Classic

காது வலி மிகவும் கடுமையானது. அதை முளையிலேயே தவிர்க்க வேண்டும். காது வலி சளிப்பிடித்து அல்லது பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டால், கீழ்காணும் வைத்தியங்களை செய்துபார்க்கலாம்.

இவ்வைத்திய அறிவுரை அனைத்தும் நிரந்தர தீர்வை அளிக்காது. காது வலி மிகவும் அதிகமாக இருந்தால் மருத்துவரை நாடுவது அவசியம்.

பூண்டு :
இரண்டு பூண்டு பற்களை கடுகு எண்ணெயில் நசுக்கி பூண்டு கருகும் வரை சூடாக்கவும். இக்கலவை ஆறியவுடன் காதில் ஊற்றவும். இக்கலவையை நல்லெண்ணையைக் கொண்டும் செய்யலாம். இது காது வலியின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

துளசி :
துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, ஏற்பட்ட தொற்று நோய் தீரும். 

கடுகு எண்ணெய் :
காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்யும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan