இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம்!!!

share on:
Classic

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மதியம் 3 மணியளவில் 2 முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

News Counter: 
100
Loading...

aravind