நாடு முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்..!!

share on:
Classic

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

புனித வெள்ளியைத் தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் அதிகாலை முதலே சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமய மாத பேராலயம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியர் தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஏசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வை வரவேற்றனர். மேலும் நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகையினையொட்டி சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

vinoth