தழும்பை சரி செய்ய தினமும் 10 நிமிடம் ஒதுக்கினால் போதும்..!

share on:
Classic

தழும்பு பிரச்சனையால் அவதி படுவோர்கள், இயற்கை முறையில் அதனை சரி செய்ய தினமும் வீட்டிலேயெ 10 நிமிடம் ஒதுக்கி இதை செய்தால் போதும்...

சில சமையல் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் ஒன்றை தயாரித்து தினமும் பயன்படுத்தினால், சில நாட்களிலேயே பெரிய மாற்றத்தைக் காணலாம்.

மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா - 2 ஸ்பூன்
ஆப்பிள் சைடெர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - சிறிதளவு
எலுமிச்சை - பாதி துண்டு

தயாரிக்கும் முறை :
முதலில் ஒரு கிளாஸில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அதில் Apple Cider Vinegar-ஐ சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கின்னத்தில் பேக்கிங் சோடவை போட்டு, அதனுடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் கொஞ்சம், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து எடுத்தால் ஃபேஸ் மாஸ்க் கலவை ரெடி.

பயன்படுத்துவற்கு முன், முகத்தை சாதாரன நீரில் கழுவி, சுத்தமான துணியால் துடைத்துவிட வெண்டும். இப்பொது, அந்த கலவையை எடுத்து முகத்தில் மாஸ்க் போல அப்ளை செய்து 10 நிமிடம் வரை உளரவிடவும். காய்ந்தவுடன், முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பி, பின்பு குளிர்ந்த நீரில்  நன்றாக கழுவிட வெண்டும்.

இவ்வாரு தினமும் பயன்படுத்திவந்தால், முகத்திலுள்ள சருமதுவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியே வந்துவிடும், மேலும், தழும்புகளில் செயல்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கருமை மறையத் தொடங்கும். முகப்பருக்களும் வராமல் இருக்கும்.

News Counter: 
100
Loading...

Ramya