உங்கள் கண் இமைகள் அடர்த்தியாக வேண்டுமா..? இதை பண்ணுங்க போதும்..!

share on:
Classic

கண்களின் இமைகள் அடர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருக்க சில மருத்துவ அழகுக் குறிப்புகள் உங்களுக்காக...

உலகில் உள்ள அனைத்து பெண்களும், தங்கள் கண் இமைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்கு இமை முடிகள் அடர்த்தியாக வளரவேண்டியது அவசியம். பொதுவாக, கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை மட்டுமே வளரும். அதிலும், அவை சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடும். பிறகு, உதிர்ந்த இடத்தில் இமை முடிகள் மீண்டும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் எடுத்துக் கொள்ளும்.

இமைகள், நம் இரண்டு கண்களையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதுவே, கண்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டுகிறது. மேலும் அழகாக்கும் பெயரில், கண் இமைகளுக்கு தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம், இமைகள் உதிரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட, இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்யலாம். அவை என்ன..?

இமைகளை அடர்த்தியாக வளர என்ன செய்வது..?
விட்டமின் E காப்ஸ்யூல்களில் இருக்கும் ஜெல்லை எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, தினமும் இரவில் சிறிய பஞ்சியில் நனைத்து, கண் இமை முடிகள் மீது தேய்க்க வேண்டும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் ஆகியவற்றை சம அளவு (இரண்டும் 1 டேபிள் ஸ்பூன்) கலந்து, தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்து வர, இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்யும்.

சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனியில் வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் வரை மென்மையாக வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்து வந்தால் இமை முடிகள் அழகாக வளரும்.

விளக்கெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை துறுவலை கலந்து, 48 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளைக் கொண்டு கண் இமை முடிகளின் மீது தடவி வர, இமைகள் அழகாக வளரும்.

சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து, தினமும் இரவில் தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். இதனால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan