அல்சரை குணப்படுத்தும் அகத்திக்கீரை..! பயன்கள் என்னென்ன..?

share on:
Classic

நாம் அன்றாடம் உண்ணும் ஒவ்வொறு உணவிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக கீரைகளில் பல சத்துக்களும், நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அதைப்போல், அகத்திக்கீரையிலும் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அகத்திக்கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக ’கீரை’ மலமிளக்கியாகவும், ’வேர்’ உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்பதன் மூலம் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல் மற்றும் காபி, டீ குடிப்பதால் உண்டாகும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர காய்சல், தாகம், கை-கால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், அம்மைக் காய்ச்சல் ஆகியவை தீரும்.

குழம்பு வைக்கையில் தாளித்தலுத்துடன் கறிவேப்பிலைக்கு பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்துக் கொண்டால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண் அகலும். அதிக உடல் சூட்டினாலும், நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் உணவை தவிர்ப்பதாலும், அதிக காரம் எடுத்துக்கொள்வதினாலும் ஏற்படும் ’அல்சர்’ எனும் வயிறு மற்றும் வாய்ப்புண் நோயை எளிதில் குணப்படுத்துகிறது இந்த அகத்திக்கீரை.

News Counter: 
100
Loading...

youtube