கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டியவை என்ன..?

share on:
Classic

ஒரு பெண்ணுக்கு  அழகே, அவள் தாய்மை அடைவதுதான். அப்படிப்பட்ட தருணங்களில் அவள், தன்னை முழுமையாக பார்த்துக்கொள்வாள்.

சத்து நிறைந்த உணவு அவசியம் :
 

இந்த தருணத்தில் உடலில் மாற்றங்கள் வருவது இயலபானவைதான் . சிலர் அந்த மாற்றங்களை கண்டு திகைப்படைகிறார்கள். பொதுவாக 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர்கள்,  கர்ப்ப காலங்களில் கூடுதலாக 300 கலோரி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளது அவசியம்.

 

ஒரு நாளைக்கு 6 டம்பளர் பால் :
 

அதாவது சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சற்றுக்கூடுதலாக சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் முதல் நான்கு மாதம் ஒரு நாளைக்கு 6 டம்பளர் பால் பருக வேண்டும். இதில் குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும். இனிப்புக்களை பதில் கிஸ்மிஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும், மற்றும் குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும் .

 

 

சூடு தன்மை நிறைந்த உணவு வேண்டாம் :

கர்பினிக்காலத்தில் காய்ச்சல்,சளி, தலைவலி மற்றும் பல் வலி ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் எந்த விதமான மருந்துகளையும் உட்டகொள்ள வேண்டாம். சூடு தன்மை நிறைந்த பழம் மற்றும் காய்கறிகளை உட்டகொள்ள வேண்டாம். 

சாப்பிட கூடாத பழங்கள் : பப்பாளி , அண்ணாச்சி , கருப்பு திராட்சை 
தினமும் சாப்பிடவேண்டிய பழங்கள் : ஆப்பிள் , பச்சை திராட்சை , ஆரஞ்சு , மாதுளை 

சிக்கன் மற்றும் இறால் போன்றவை கூட சூடு நிறைந்தவை. எனவே, அவற்றை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் . சிக்கன், நிறைய தயிர் சேர்த்து சாப்பிடுங்கள்.
 

புரோக்கோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் இரும்பு சக்தி அதிகம் உள்ளது. இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.  ஸ்பினாச் கீரையை சூப் வைத்து கூட குடிக்கலாம்.  சர்க்கரை பாகு காய்ச்சி, அதில் நெல்லிக்காயை வேகவைத்து, பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம். 

News Counter: 
100
Loading...

youtube