இயற்கை உணவை உண்பதே நெல் ஜெயராமனுக்கு நாம் அளிக்கும் மரியாதை - கார்த்தி

share on:
Classic

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க வாழ்நாளை அர்ப்பணித்து பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார். 

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பின்னர், ஜெயராமனின் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு நாளை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி இயற்கை உணவு தயாரிப்பவர்களிடம் பேரம் பேசாமல் அதை வாங்கி உண்பதே நெல் ஜெயராமனுக்கு நாம் அளிக்கும் மரியாதை என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind