தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது - மு.க.ஸ்டாலின்

share on:
Classic

மேற்குவங்கத்தில் ஒருநாளுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க உத்தரவிட்டு, தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், மேற்குவங்கத்தில் ஒருநாளுக்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடிக்க உத்தரவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டினார். மத்திய அரசுக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை இருப்பதாக கூறினார். தமிழகத்தில் பெரியார் சிலையை பாஜகவினர் உடைத்து வன்முறையில் ஈடுபட்டது போல், மேற்குவங்கத்தில் இஸ்வாரா சந்திர வித்யாசாகரின் சிலையை உடைத்துள்ளதாக ஸ்டாலின் கடும் விமர்சன் செய்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan